1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (18:48 IST)

கேஸ் சிலிண்டரில் சாராயம் கடத்திய பலே கில்லாடிகள்

மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கேஸ் சிலிண்டரில் சாராயம் கடத்தி வந்த கில்லாடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
பீகார் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இதனால் குடிப்பவர்கள் பிற மாநில எல்லைக்கு செல்ல தொடங்கினர். அண்மையில் அண்டை நாடான நேபாளத்திற்கு சென்று குடித்துவிட்டு வந்த 70 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இந்நிலையில் பல நாட்களாக நூதன முறையில் சிலர் கேஸ் சிலிண்டரில் சாராயத்தை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர். ஜார்கண்ட் - பீகார் எல்லைப்பகுதியில் சிலிண்டரில் கடத்தி கொண்டுவரப்பட்ட 149 சாராய பாக்கெட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
 
அதோடு இதுபோல வழக்கமாக கடத்தல் செய்துவந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.