1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூன் 2020 (07:37 IST)

சகோதரிக்காக முழு விமானத்தையும் புக் செய்தாரா அக்சய்குமார்? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மும்பையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய தனது சகோதரிக்காக முழு விமானத்தையும் அக்சய்குமார் புக் செய்ததாக செய்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அக்சய்குமாரின் சகோதரி சமீபத்தில் மும்பையில் இருந்து டெல்லி செல்ல இருந்ததாகவும் அவருடன் அவருடைய இரண்டு மகள்களும் செல்ல இருந்ததாகவும், இந்த மூன்று பேருக்காக ஒரு முழு விமானத்தில் உள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் அக்சய்குமார் புக் செய்ததாகவும்,  தனது சகோதரியும் அவருடைய மகள்களும் பாதுகாப்பாக டெல்லி செல்ல வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்ததாகவும் ஒரு சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
ஆனால் இந்த செய்தியை அக்சய்குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது தனது சகோதரி கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் இருந்து எங்கும் செல்லவில்லை என்றும் அவர் டெல்லி செல்ல இருப்பதாக வெளிவந்த தகவலே முழுக்க முழுக்க பொய் என்றும் கூறினார். மேலும் தனது சகோதரிக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருக்கிறார் என்றும் அவருக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும் மூவரும் டெல்லி செல்வதற்காக முழு விமானத்தையும் தான் புக் செய்து இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இதுகுறித்து தனது தரப்பினர் காவல்துறையினர்களிடம் புகார் கொடுக்க விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் அக்சய்குமார் அவர்களின் இந்த விளக்கத்தை அடுத்து முழு விமானத்தையும் அவர் புக் செய்ததாக வெளிவந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உண்மையாகி விட்டது. கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்த அக்ஷய் குமார் மீது சமூக விரோதிகள் பொய்யான தகவலை பரப்பி வருவது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது