வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 20 மே 2014 (17:10 IST)

கட்சியிலிருந்து 36 தலைவர்களை நீக்கினார் அகிலேஷ்; உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி படுதோல்வி எதிரொலி!

உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி கட்சி படுதொல்வியை சந்தித்ததன் எதிரொலியாக அக்கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள 36 பேரை அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. குறிப்பாக 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத வகையில் பாஜக கூட்டணி 73 தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளையே பிடித்தது.
 
இந்த மோசமான தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சி தலைமை ஆய்வு செய்து வரும் நிலையில், கட்சியில் அமைச்சர் ரேங்கில் உள்ள 88 தலைவர்களில் 36 பேர் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
 
தோல்விக்காக மற்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ள அகிலேஷ் யாதவ், தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார்.