வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (15:13 IST)

விமான நிலையத்தில் தூங்கக் கூடாது – பயணிகளைக் கடுப்பாக்கிய உத்தரவு !

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் தூங்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவா விமான நிலையத்தில் பயணிகள் சிலர் விமானப் புறப்பாடு பகுதிக்கு அருகில் கீழே படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் பரவ பலரும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இனிமேல் விமான நிலையங்களில் பயணிகள் தூங்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து இப்போது சென்னை விமான நிலையத்திலும் இதுபோல பயணிகள் தூங்கக்கூடாது என வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்துக்காக காத்திருக்கும் போது சேர்களில் அமர்ந்தபடியே உறங்கும் பயணிகளை காவலர்கள் எழுப்பி தூங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் விமான நேரத்தை தாமதப்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்த்தால் பயணிகளின் காக்கும் நேரத்தை வீணாக்காமலும் இது போன்ற செயல்களை தவிர்க்கவும் செய்யலாம் எனப் பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.