திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (11:19 IST)

ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!

இந்தியாவில் பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோர் பாதுகாப்பாக பயணிக்க வாங்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் விமானங்களில் இரண்டாவது விமானமும் இன்று இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணிக்க அதிநவீன அம்சங்கள் கொண்ட ஏர் இந்தியா ஒன் என்ற விமானம் வாங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பானதாகவும், ஊடுறுவ முடியாததாகவும் அமெரிக்காவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் இருந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் பயணிக்கும் அந்த விமானம் போலவே அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய விமானத்தை இந்தியாவிற்கு வாங்க போயிங் நிறுவனத்துடன் 8,400 கோடி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இரு விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில் முதலாவது விமானம் கடந்த மாதம் இந்தியா வந்தடைந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது விமானமும் இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா ஒன் விமானம் போயிங் 777 வகையை சேர்ந்தது. ஏர் இந்தியா விமானத்தில் கான்பரஸ் ஹால், தங்கும் அறை, சமையலறை, பதுங்கு தளம் ஆகிய வசதிகள் உள்ளன. தொலைபேசி, கணினி, இணையம் ஆகிய அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் உள்ளன. மேலும் ராடரில் தென்படாமல் மறைக்கும் வசதி, ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் வசதி ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.