வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (12:01 IST)

பூஸ்டர் தடுப்பூசிக்கு தேவை உள்ளதா? எய்ம்ஸ் டாக்டர் விளக்கம்!

இப்போது இருக்கும் சூழ்நிலையில் அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக செலுத்தப்பட வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

 
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பல நாடுகளிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் விரைவில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதவாது, பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை. 
 
இப்போது இருக்கும் சூழ்நிலையில் தகுதியுள்ள அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக செலுத்தப்பட வேண்டும். இந்த நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட ஆரம்பித்தால் தகுதியுள்ள சிலருக்கு முதல் டோஸ் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.