புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 22 மே 2016 (20:52 IST)

7 தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழப்பு

கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
 

 
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் உள்ளிட்ட 7 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. இதில், குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பீர்மேடு தொகுதியில், இடுக்கி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.அப்துல்காதர் நிறுத்தப்பட்டார்.
 
இதே தொகுதியில், இரண்டு முறை வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிஜூமோள், காங்கிரஸ் வேட்பாளர் சிரியாஸ் தாமஸ் உட்பட 8 பேர் போட்டியிட்டனர்.
 
அதிமுக வேட்பாளர் ஏ.அப்துல் காதர் 2,862 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்ததோடு, டெபாசிட்டையும் இழந்தார்.
 
இதேபோல் உடும்பஞ்சோலை தொகுதி அதிமுக வேட்பாளரும், இடுக்கி மாவட்ட அவைத் தலைவருமான சோமன் 1,651 வாக்குகளும், தேவிகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் தனலெட்சுமி 11,613 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.