செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (18:16 IST)

தேர்தல் முடிவுக்கு பின் வருது பாருங்க ’பெட்ரோல் விலைப்புயல்’ ....?

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு வழக்கம் போல விலை ஏற்றம் கண்டது. இந்நிலையில் இன்று 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜாவுக்கு பலத்த தோல்வியே  பல இடங்களிலும் கிடைத்தது.
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 72ரூபாய் 82 காசுகளாக உள்ளன. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இனி பெட்ரோல் விலை உயருமா என்று  வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.
 
சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்திய  எண்ணெய் நிறுவனங்களே நம் நாட்டில் விலையை முடிவு செய்து வருவதால் தற்போது முடிந்துள்ள 5 மாநில தேர்தலுக்கும் பெட்ரோல் விலை உயர்வுக்கும் எந்த  சம்பந்தமும் இருக்காது என்றே பொருளாதார நிபுண ர்கள் கருதுகிறார்கள்.
 
இந்நிலையில் சில நாட்களுக்குப் பிறகுதான் இந்த தேர்தல் முடிவுகள் பெட்ரோல், டீசல்  விலையில் மாற்றத்தை தோற்றுவித்ததா இல்லையா என்பது தெரியவரும்.