வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 12 நவம்பர் 2016 (17:09 IST)

2 வாரங்கள் கழித்துதான் ஏடிஎம்களில் புதிய ரூபாய் நோட்டுகள்

நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் புதிய ரூபாய் நோட்டுகள் 2 வாரங்கள் கழித்துதான் கிடைக்கும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


 

 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு சார்பில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.
 
ரூ.2000 புதிய நோட்டுகள் மட்டும் வங்கிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. புதிய 500 ரூபாய் நோட்டு விநியோகிக்க இன்று கால தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் நோட்டுகளும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஏடிஎம் மையங்களில் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதுகுறித்து அருண் ஜெட்லி கூறியதாவது:-
 
புதிய ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்க இன்னும் 2 வாரங்கள் ஆகும். பண தட்டுபாட்டை போக்க நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன், என்றார்.