1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (10:49 IST)

நீண்ட இடைவெளிக்குப் பின் பாஜக தேசிய கூட்டத்தில் அத்வானி!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி இன்று தனது 95 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக உருவாக்கியதில் அத்வானியின் பங்கு முக்கியமானது. ஆனால் மோடி பிரதமர் ஆன பின்னர் அத்வானியை கட்சியில் முக்கியத்துவம் இழக்கவைத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது அத்வானி பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கலந்துகொண்டார். இன்று அவரின் 95 ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.