ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (16:55 IST)

மத்திய அமைச்சர் கனவில் அதிமுக எம்பிக்கள்!

மத்திய அமைச்சர் கனவில் அதிமுக எம்பிக்கள்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவையை பிரதமர் மோடி மாற்றி அமைக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
தற்போது அதிமுக வேறு பாஜக வேறு கிடையாது என்ற சூழல் தான் நிலவி வருவதாக கூறப்படுகிறது. பாஜக என்ன திட்டம் கொண்டும் வந்தாலும் அதனை கண்ணை மூடிக்கொண்டு ஆமோதிக்கும் நிலையில் தான் அதிமுக தற்போது உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் அதிமுக எம்பிக்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கலாம் என மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. துணை குடியரசுத்தலைவராக பாஜக சார்பில் முன்னிருத்தப்பட்டுள்ள வெங்கையா நாயுடு உள்ளிட்ட சிலரின் நாற்காலிகள் நிரப்பப்பட உள்ளது.
 
பாஜக அதிமுகவுக்கு ஒதுக்க உள்ள மத்திய அமைச்சரவை பதவியை பிடிக்க அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
மேலும் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றுள்ளதும் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக தான் என கூறப்படுகிறது. ஆனால் மோடி எப்பொழுது எந்த முடிவு எடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இவர்களின் அமைச்சர் கனவு பலிக்குமா என்பது கேள்விக்குறி தான்.