1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (13:58 IST)

அமேசான் ஓனரையே பின்னுக்கு தள்ளிய அதானி! – உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்!

இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது
சமீபத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்த அதானி தற்போது அமேசான் நிறுவனரையே வீழ்த்தியுள்ளார்.

உலகம் முழுவதும் பல பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பல பில்லியனர்கள் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் உலக டாப் 10 பில்லியர்கள் பட்டியலில் அதானி நுழைந்தார்.

இந்திய தொழிலதிபரான அதானி தொடர்ந்து முன்னேறி மூன்றாவது இடத்தை அடைந்தார். உலக பணக்காரர் பட்டியலில் தற்போது வரை முதல் இடத்தில் எலான் மஸ்க்,  இரண்டாவது இடத்திலும் ஜெப் பிஜாஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் அதானி ஆகியோர் இருந்து வந்தார்கள்.


இந்நிலையில் நேற்று முதலாக அமெரிக்க பங்குசந்தை வீழ்ச்சியை கண்டு வருவதால் எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோசின் சொத்து மதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

இதனால் தற்போது 155.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வைத்துள்ள அதானி, அமேசார் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து அமெரிக்க சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அதானி முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை அதானி படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.