வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (17:07 IST)

அதானி குழுமத்தின் மொத்த கடன் ரூ.2.75 லட்சம் கோடி.. அதிர்ச்சி தகவல்..!

அதானி குழுமத்தின் மொத்த கடன்  ரூ.2.75 லட்சம் கோடி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று அதானி குழுமம் என்பதும் இந்த குழுமம் மீது அவ்வப்போது சில குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தாலும் இந்நிறுவனத்தின் பங்குகள் தற்போது பலமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு 2.75 லட்சம் கோடி என்றும் அதில் 75 ஆயிரத்து 877 கோடியை உள்நாட்டில் நீண்ட கால கடன் அடிப்படையில் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
2022-23 நிதியாண்டில் மட்டும் அதானி குழுமம் உள்நாட்டில் 59 ஆயிரத்து 2550 கோடி கடன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிக வட்டி விகிதம் கொண்ட வெளிநாட்டு கடனை அடைக்கும் வகையில் அதானி குழுமம் உள்நாட்டில் அதாவது இந்திய வங்கிகளிடமிருந்து அதிகம் கடன் பெற்று வருகிறது என்றும் இந்திய வங்கிகளில் அதிக கடன் பெற்ற நிறுவனமாக அதானி குழுமம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
 
இந்திய வங்கிகளில் ஏராளமான கடன்களை அதானி குழுமம் பெற்று வருகிறது என்று பொருளாதாரம் நிபுணர்கள் எச்சரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran