1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூன் 2024 (19:12 IST)

ஜெகன்மோகனின் ரூ.500 கோடி பங்களா.. மெளனம் கலைத்த நடிகை ரோஜா..!

முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா கட்டி இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதையும் அது குறித்த வீடியோ வைரலானது என்பதையும் பார்ப்போம். 
 
இந்த நிலையில் இது குறித்து நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அந்த பங்களா அரசுக்கு சொந்தமானது என்றும் ஜெகன்மோகனுக்கு சொந்தமானது என்று தவறான தகவல் பரவி வருவதாகவும் தெரிவித்தார் 
 
ருஷிகொண்டா என்பது ஒரு சுற்றுலா மையம் என்பதால் அங்கு சுற்றுலாத்துறை கட்டிடங்கள் கட்டுவது தவறா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடத்தில் ஒரு சொகுசு மாளிகை கட்டியது தவறா? மத்திய அரசின் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை அரசு கட்டிடம் என்பது கூட அறியாமல் ஜெகன்மோகனுக்கு சொந்தமான கட்டிடம் என்று அவரது நற்பெயருக்கு தளங்கம் விளைவிப்பது சரியா? என்றும் அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.
 
உலகில் உள்ள சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் கூடிய ஒரு கட்டிடத்தை பொய்யான தகவல் மூலம் வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் அவர் குற்றம் காட்டியுள்ளார்.
 
Edited by Mahendran