பிரபல நடிகர் ஓம் பூரி திடீர் மரணம்


Murugan| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:09 IST)
பிரபல இந்தி நடிகர் ஓம் பூரி இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
 
1950ம் ஆண்டு ஹரியான மாநிலத்தில் பிறந்த இவர் பல இந்தி, மராட்டி, கன்ண்டம், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் கமலுடன் ஹேராம் படத்தில் இவர் நடித்துள்ளார். 

 

 
1982ம் ஆண்டு வெளியான ஆரோஹன், 1984ம் ஆண்டு வெளியான அர்த் சத்யா ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு தேசிய விருது தரப்பட்டது. மேலும், 1990ம், ஆண்டில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது.
 
இந்நிலையில் இன்று காலை  திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிர் இழந்தார்.  அவரின் மறைவு பாலிட்டில் பெருத்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :