38 வயது பெண்ணை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த 23 வயது நடிகர் கைது


Murugan| Last Modified வியாழன், 24 செப்டம்பர் 2015 (13:33 IST)
தன்னை விட 15 வயது மூத்த பெண்ணை, 6 மாதங்களாக பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 
மும்பையில், ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சௌரப் சாய் சர்தஜ். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு நடன நிகழ்ச்சியில் 38 வயது பெண்மணி ஒருவர் அறிமுகமானார்.  இருவரும் நண்பர்கள் ஆனார்கள். அந்தப் பெண்மணி மைசூரில் கணவன் மற்றும் மகளுடன் தங்கியியுள்ளார்
 
சௌரப், மைசூருக்குச் சென்று அந்த பெண்ணின் கெஸ்ட் ஹவுசில் பல முறை தங்கியிருக்கிறார். அந்த பெண், அவரின் கணவரிடமும் இவரை அறிமுகம் செய்து இருக்கிறார். ஒரு நாள், அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற இவர், பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து, அவரை மிரட்டியுள்ளார். தன் இச்சைக்கு இணங்கவில்லை என்றால், வீடியோவை அவர் கணவனிடம் காட்டிவிடுவதாகவும், இணையதளங்களில் பதிவு செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
 
இதனால் வேறு வழியில்லாமல் அந்தப்பெண், அந்த நடிகரின் இச்சைக்கு இணங்கியுள்ளார். அந்த நடிகர் மும்பையில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அந்தப் பெண்மணியை வர வழைத்து உல்லாசமக இருந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணிடமிருந்து 15 லட்சம் வரை பணத்தையும் கரந்துவிட்டார். பணம் அவரிடம் இல்லாதபோது அவரின் நகைகளையும் விற்க வைத்துள்ளார்.
 
இதற்கிடையில், அந்த நடிகருடன், அந்தப்பெண் ஒரு ஹோட்டலில் இருந்தபோது, அவரின் கணவர் போன் செய்திருக்கிறார். நடிகரிடம் கட்டுப்பாட்டில் இருந்ததால் நாள் முழுவதும் அவர் போனை எடுக்கவில்லை. தன் மனைவிக்கு என்னமோ ஏதோ என்று பயந்த கணவர், கடைசியாக “நீ போனை எடுக்க வில்லை என்றால், நான் காவல் நிலையத்திற்கு சென்று புகார்  கொடுக்கப்போகிறேன்” என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினார். இதைப் பார்த்த பதறிய அந்தப்பெண், உடனே வீட்டிற்குச் சென்ற கணவனிடம், தன் தோழிகளுடன் ரெசார்ட் போயிருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
 
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், அவரை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டார். இந்நிலையில், அந்த நடிகர் தொந்தரவு அதிகமானது. மீண்டும் பணம் கேட்டும், இல்லையென்றால் அவரின் மகளைக் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். 
 
இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் அவ்வளவுதான் என புரிந்தகொண்ட அந்தப் பெண்மணி, காவல் நிலையத்தில் அந்த நடிகரைப் பற்றி புகார் அளித்தார். மும்பை போலிஸ் போதுமான ஆதரங்களுடன் அந்த நடிகரை கைது செய்துள்ளது. 
 
காமக்களியாட்டம் ஆடிய ஹீரோ இப்போது சிறையில் களி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :