1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 17 மார்ச் 2016 (13:24 IST)

5 மாணவிகள் மீது ஆசிட் வீசிய 8 ஆம் வகுப்பு மாணவன்

பஞ்சாபில் 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது நண்பரோடு சேர்ந்து, தனது வகுப்பில் படிக்கும் 5 மாணவிகள் மீது ஆசிட் வீசியுள்ளான்.


 

 
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சாஜன்.
 
இந்த மாணவன், தனது வகுப்பில் படிக்கும் பிராபி ஜோத் கவுர் என்ற மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக கூறப்படுகின்றது.
 
இது குறித்து ஜோத் கவுர் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜோத் கவுரின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து புகார் செய்துள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, மாணவன் சாஜன் பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் ஜோத் கவுரைப் பழிவாங்க திட்டமிட்டுள்ளான்.
 
இந்நிலையில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜோத் கவுர் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த சாஜன் ஆசிட் வீசியுள்ளான்.
 
இதனால், ஜோத் கவுர் எரிச்சல் தாங்க முடியாமல் அலரித்துடித்துள்ளார். அத்துடன், ஜோத் கவுருடன் சென்ற மேலும் 4 மாணவிகள் மீதும் ஆசிட் பட்டது. இதனால், அவர்கள் அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
 
இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆசிட் வீச்சால் காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்கையளிக்கப்பட்டு வருகின்றது.
 
இதைத் தொடர்ந்து, அந்த மாணவன் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர்  தலைமறைவாக உள்ள மாணவன் சாஜனையும், அவருக்கு உதவிய நண்பரையும் தேடி வருகின்றனர்.
 
இந்த ஆசிட் விச்சு சம்வம் பஞ்சாப் மட்டுமன்றி நாட முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.