திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (09:55 IST)

உன் மீச, என் மீச இல்ல: இது அபிநந்தனின் அருவா மீசை!!! வைரலாகும் மீசை ஸ்டைல்

அபிநந்தனின் அருவா மீசை ஸ்டைலில் கவர்ந்த இளைஞர்கள், அதேபோல் மீசை வைக்க தொடங்கிவிட்டனர்.
 
தாய் நாட்டை காப்பதற்காக விமானப்படையில் பணிபுரிந்து எதிரி நாட்டிடம் சிக்கி, தன் உயிரையும் பணயம் வைத்து இந்தியாவின் ரகசியத்தை சற்றும் வெளிப்படுத்தாமல் தைரியமாக பாகிஸ்தான் அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்ட வீரர் அபிநந்தனை நாடே கொண்டாடி வருகிறது. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆகிவிட்டனர்.
 
இந்நிலையில் அபிநந்தனின் அருவா மீசை ஸ்டைலில் கவர்ந்த இளைஞர்கள், அதேபோல் மீசை வைக்க தொடங்கிவிட்டனர். இது டிரெண்டாகவே மாறிவிட்டது. இதேபோல் மீசை வைக்க சொல்லி, இளைஞர்கள் பார்பர் ஷாப்பை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதுபற்றி பெங்களூர் இளைஞர் ஒருவர் பேசுகையில் நான் அபிநந்தனின் ரசிகன் ஆகிவிட்டேன். அவரைபோலவே மீசை வைத்துள்ளேன். அவர் தான் உண்மையான ஹீரோ என கூறினார்.