1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (10:59 IST)

இந்தியாவில் தெருக் குழந்தைகள் அதிகரிப்பு! – குழந்தைகள் உரிமைகள் ஆணையம்!

இந்தியாவில் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொருளாதாரரீதியாக முன்னேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஏழை மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ள நிலையில் ஏழைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 17,914 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,952 குழந்தைகள் தெருக்களில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.