செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (16:51 IST)

காஷ்மீரில் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுமா??

காஷ்மீரில் உள்ள அனைவருக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 6 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த பணிகள் முடிந்த பிறகு காஷ்மீரில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை காட்டாயமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மக்களிடம் ஆதார் அட்டை கட்டாய திட்டம் கொண்டுவருவதன் மூலம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

காஷ்மீரில் தற்போது 70 % பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளதாகவும், அதை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பிறகு 100 சதவீதம் முழுமையாக்க முடிவு செய்யப்பட உள்ளது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.