1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2017 (15:58 IST)

மாடுகளுக்கும் வருகிறது ஆதார் எண் - மோடி அதிரடி

மனிதர்களுக்கு வழங்கும் ஆதார் எண் போல், இந்தியாவில் உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அடையாள வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 

 
சென்ற காங்கிரஸ் ஆட்சியிலேயே இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் பாஜக அரசு ஏற்றபின் அது நடைமுறைக்கு வந்தது. ஆதார் எண் என்பது 12 இலக்கு அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம், ஒரு குடையின் கீழ் ஒருங்கினைப்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.
 
இந்நிலையில், மக்களுக்கு வழங்குவது போன்று இந்தியாவில் உள்ள  மாடுகளுக்கும் 12 இலக்குடைய தனி அடையாள எண் விரைவில் வழங்கப்படவுள்ளது. மாடுகளின் காதுகளில் இந்த அடையாள எண் ஒட்டப்படும். இதன் மூலம், மாடுகளின் சந்ததி பெருக்கம், பால் உற்பத்தி பெருக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்படுவதை கண்காணிப்பது ஆகியற்றை தெரிந்து கொள்ள முடியும் என கால்நடை வளர்ப்பு துறை அறிவித்துள்ளது.
 
இதற்காக மத்திய அரசு 148 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாம். 2017ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 88 மில்லியன் மாடுகளுக்கு இந்த அடையாள எண் ஒட்டப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.