தேர்தலுக்கு முன்பு ஆன்மீக பயணம்.! ஆழ்ந்த தியானத்தில் எடப்பாடி பழனிசாமி..!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது இந்தியா கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டு உள்ளதால் வரும் தேர்தலில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி மாநில கட்சிகளும், கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை என பல்வேறு ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.
திருப்பதி மலையில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். நேற்று மாலை அவர் வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார்.
தொடர்ந்து கோயிலிலேயே ஒரு இடத்தில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமி இரண்டு கண்களையும் மூடி அப்படியே தியானத்தில் மூழ்கினார். சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானம் செய்த அவர், பிறகு விஐபி விருந்தினர் மாளிகைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று காலை அவர் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
ஆன்மீகத்தின் பலத்தை நம்பிக்கை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததாக சொல்லப்படுகிறது.