இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு.. 17 வயது பெண்ணுக்கு பாலியல் கொடுமை..!
17 வயது பெண்ணுக்கு பாலியல் கொடுமை செய்த வழக்கில் இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது பெண்ணுடன் பழகி, அவரை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இருவரும் 5 வருடங்களாக பழகி வந்த நிலையில், திருமணம் செய்யாமல் மோசடி செய்ததாக இளம்பெண் புகார் அளித்ததால் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Edited by Mahendran