புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (08:46 IST)

வீட்டு வாசலில் வாந்தி: வாயிலே அடித்துக் கொன்ற இளம்பெண்

மும்பையில் வீட்டு வாசலில் வாந்தி எடுத்த நாயை இளம்பெண் ஒருவர் வாயிலே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மும்பையில் வகோலா என்ற பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றி திரிந்துகொண்டிருந்தது. அதற்கு அப்பகுதி மக்கள் அன்றாடம் உணவு வழங்கி வருவர். அந்த ஏரியாவிற்கு இது செல்ல நாயாகவே திகழ்ந்தது.
 
இந்நிலையில் சமீபத்தில் அந்த நாய்க்கு உடம்பு முடியாமல் இளம்பெண் ஒருவரின் வீட்டு வாசலில் வாந்தி எடுத்துவிட்டது. இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த அந்த பெண், நாயை வாயிலேயே கடுமையாக தாக்கினார். இதில் வாலியிலிருந்து ரத்தம் வழிந்து அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீஸார் அந்த பெண் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாவம் வாயில்லாத அந்த ஜீவனை அடித்துக்கொன்ற அந்த அரக்கப் பெண்ணை என்னவென்று சொல்வது...