வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2019 (10:39 IST)

அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு திருடன்: சுவரொட்டியால் பரபரப்பு

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலைத் திருடர் என கூறும் சுவரொட்டிகள், டெல்லியில் பல பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில் சுமார் ரு.2,000 கோடியை டெல்லியின் முதல்வர் கேஜ்ரிவால் கொள்ளையடித்ததாக சிரோமனி அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மன்ஜிந்தர் சிங் குற்றம் சாட்டிவந்தார்.

மேலும் அவர் ரூ.5 லட்சத்துக்கு கட்டியிருக்கக் கூடிய வகுப்பறைகளை, ரூ.25 லட்சத்துக்கு கட்டப்பட்டுள்ளது எனவும் கூறிவந்தார். இந்நிலையில் சிரோமணி அகாலி தளம் கட்சி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை திருடன் என குற்றம்சாட்டி ஒரு கேலி சித்திரம் வரைந்து, அதனை சுவரொட்டிகளாக பல இடங்களில் ஒட்டியுள்ளன.

அந்த சுவரொட்டிகளில் கேஜ்ரிவால் சிறையில் கைதிகள் அணியும் ஆடையுடனும், அவர் கையில் பணப் பையுடன் காணப்படுகிறார். மேலும் அந்த சுவரொட்டிகளில் “ தன்னை நேர்மையானவர் எனக் கூறியவரே பெரிய திருடனாக மாறிவிட்டார்” என ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.

டெல்லி முதல்வரை இவ்வாறு கேலி செய்து ஒட்டிய சுவரொட்டிகளால் ஆம் ஆத்மி கட்சியினர் பெரும் கொந்தளிப்படைந்துள்ளனர். மேலும் இந்த சுவரொட்டிகளால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.