புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (16:43 IST)

கல்லூரியில் படிக்கும் மாணவியை அம்மாவாக்கிய 8-ஆம் வகுப்பு மாணவன்!

கல்லூரியில் படிக்கும் மாணவியை அம்மாவாக்கிய 8-ஆம் வகுப்பு மாணவன்!

கேரளா மாநிலத்தில் 18 வயதாகும் கல்லூரியில் படிக்கும் மாணவியை 8-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் அம்மாவாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கேரளாவின் கொச்சியை சேர்ந்தவர் அந்த மாணவி. இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தந்தை 8 வகுப்பு படிக்கும் மாணவன் என்று அந்த மாணவி கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
 
இதனையடுத்து அந்த மாணவன் மீது அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணையில் அந்த சிறுவன் கொச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் தூரத்து உறவினர்கள் என தெரியவந்துள்ளது.
 
கல்லூரி படிக்கும் பெண்ணை இந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தை பிறந்துள்ளதால் டிஎன்ஏ பரிசோதனையும் செய்யப்பட்டு அதில் அந்த சிறுவன் தான் குழந்தைக்கு தந்தை என்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.