7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்: தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்


Caston| Last Modified வியாழன், 30 ஜூன் 2016 (17:33 IST)
அலகாபாத்தில் 7 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டு 15 வயது சிறுவனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த மூன்று வாரம் கழித்து அந்த சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 
 
இந்த மாதம் 5-ஆம் தேதி அந்த 7 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்த போது 5 பேர் கொண்ட கும்பலும் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
 
சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பக்கத்து வீட்டு சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
 
இந்த பலாத்கார விவகாரத்தில் அந்த சிறுமியின் தந்தைக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே போலீஸார் அந்த சிறுமியின் தந்தையையும் கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :