வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (17:57 IST)

நாட்டை காப்பாற்ற 7 மணி நேர தியானம்: முதல்வர் அறிவிப்பு..!

மோசமாக சென்று கொண்டிருக்கும் நாட்டை காப்பாற்ற ஏழு மணி நேரம் தியானம் செய்யப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 
 
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாடு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் நாட்டை தீயவர்களிடம் காப்பாற்ற வேண்டும் என கூறி இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடர் தியானத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். 
 
டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை 7 மணிக்கு தனது தியானத்தை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் சற்று முன் தனது தியானத்தை முடித்துக் கொண்டார். நாடு முன்னேறாமல் இருக்கிறது என்றும் மருத்துவமனைகள் கல்வி நிலையங்களை மேம்படுத்தியவர்களை தீயவர் என்று கூறி சிறையில் அடைத்துவிட்டனர் என்றும் நாட்டு மக்களுக்காக உழைக்க யாரும் இல்லாத இந்த நேரத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றத்தை தியானம் செய்துள்ளேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran