வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (09:29 IST)

திங்கள் டூ சனி ஆறு பிரதமர்கள்: அமித்ஷா கிண்டலுக்கு ஸ்டாலின் பதிலடி

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் திங்கள் முதல் சனி வரை ஆறு பிரதமர்கள் பதவியில் இருப்பாரகள் என்று கிண்டலடித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
 
உபி மாநிலம் கான்பூர் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்துக் கொண்டு பேசுகையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வாரத்தில் 6 நாட்களில் 6 பிரதமர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறினார். அதாவது திங்கட்கிழமை அகிலேஷ் யாதவும், செவ்வாய்கிழமை மாயாவதியும், புதன்கிழமை மம்தா பானர்ஜியும், வியாழக்கிழமை தேவகவுடாவும், வெள்ளிக்கிழமை சந்திரசேகரராவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார் என்றும் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை விடப்படும் என்றும் அமித் ஷா பேசினார்
 
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் கூறியபோது, 'மெகா கூட்டணியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பார் என அமித்ஷா கூறியுள்ளார். இதன்மூலம், எதிர்க்கட்சிகள்தான் ஆட்சிக்கு வரப்போகின்றன என்பதை அமித்ஷாவே ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் வாரத்தில் ஒருநாளாவது பிரதமர் மோடி இந்தியாவில் இருந்தது உண்டா என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மோடி பிரதமராக இருக்கும் எல்லா நாளுமே விடுமுறைதான் என்றும் கூறியுள்ளார்.