1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2016 (20:42 IST)

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்றும், ரூபாய் நோட்டுகளை சமர்ப்பிக்க மக்களுக்கு 50 நாட்கள் கால் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


 

 
இன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அதற்கு பதிலாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து 100 ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம். 
 
மத்திய அமைச்சர் அவையில் உரையாற்றி வரும் நரேந்திர மோடி இதுகுறித்து கூறியதாவது:-
 
500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க டிசம்பர் 30ஆம் தேதி கடைசி நாள். 500, 1000 ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் சம்ர்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை சமர்ப்பிக்க மக்களுக்கு 50 நாட்கள் கால் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நாட்டு மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். நவம்பர் 11ஆம் தேதி வரை அரசு மருத்துவமனைகளில் செல்லுபடியாகும், என்றார்.