8 மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை: எந்த மாநிலத்தில் தெரியுமா?
குஜராத் மாநிலத்தில் எட்டு மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
குஜராத் மாநில விசாரணை நீதிமன்றத்தில் கடந்த 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது ஆனால் கடந்த எட்டு மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கியுள்ளன
பல்வேறு நகரங்களில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் பாலியல் குற்றங்களுக்காகவும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் பாலியல் குற்றங்கள் செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.