1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 29 ஜூலை 2017 (05:05 IST)

44 எம்.எல்.ஏக்கள் திடீர் கடத்தல்: மோடி மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவமா?

குஜராத் மாநிலத்தில் 44 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டு பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூவத்தூருக்கு கடத்தப்பட்டது போல வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் எம்.எல்.ஏக்கள் விலை போய்விடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டதாக தெரிகிறது
 
குஜராத்தில் காலியாகவுள்ள 3 ராஜ்யசபா பதவிக்கு வரும் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷ, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது பட்டேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
ஒரு வேட்பாளர் வெற்றி பெற 44 எம்.எல்.ஏக்கள் தேவை என்பதால் குஜாராத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 44 பேர் கடத்தப்பட்டு பெங்களூரூக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் வரும் 8ஆம் தேதி அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை போய்விட கூடாது என்பதற்காக மோடியின் சொந்த மாநிலத்திலேயே இப்படி ஒரு சம்பவமா? என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.