வாட்ஸ் அப்பில் பரவிய பலாத்கார வீடியோவால் 40 வயது பெண் தற்கொலை


Caston| Last Modified வியாழன், 14 ஜனவரி 2016 (18:56 IST)
உத்திரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் சுகாதார ஆர்வலர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதனை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்டதால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

 
 
மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர் சுகாதார ஆர்வலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அவரது வீட்டருகில் 4 பேர் பலாத்காரம் செய்தனர்.
 
பலாத்காரம் செய்தவர்கள் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பி விட்டுள்ளனர். இதனை அறிந்த அப்பெண் அவமானத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஒருவரை கைது செய்து மீதமுள்ளவர்களை தேடிவருகின்றனர்.
 
தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதால், குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :