1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (14:03 IST)

2022 - 2023 ஆண்டு பட்ஜெட் தாக்கல்!

2022-23ம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்.
 
கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.
 
[டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும்.
 
தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்.
 
 ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகின்றது.
 
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் விவசாயத் துறையில் டிரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும்.
 
இதன் மூலம் விவசாய நிலங்களை அளவிடுவது உரங்களை தெறிப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
 
சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல் தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
 
தடுப்பூசி செலுத்தும் திட்டம் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது பொருளாதார மீட்சிக்கும் பெரிய அளவில் உதவியது.
 
சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை.
 
சிறு, குறு நிறுவனங்களுக்கான அவசரகால கடன் உதவி உத்தரவாத திட்டம் 2023 மார்ச் வரை நீட்டிப்பு.
 
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 48,000 கோடி ரூபாய் வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன.
 
தொலைத்தொடர்பு மருத்துவ சேவை வசதி மேம்படுத்தப்படும்; 
 
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்விற்கான திட்டங்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்கப்படும் .
 
கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும்
 
ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வெற்றிகரமாக முடிந்தது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி -யில் பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்
 
3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு
 
பள்ளிகளில் கல்வி கற்பித்தலை மேம்படுத்த உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகம்
 
பிரதமரின் இ-வித்யா மூலம் அதிக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்; 
மகளிர் மேம்பாட்டிற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்
 
நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சலகங்கள் CBS (core banking solution) கீழ் கொண்டுவரப்ட்டுள்ளது.
 
குழந்தைகள் கல்வி மேம்பாடடைய சக்க்ஷன் அங்கன்வாடிகள் மூலம் ஒலி-ஒளி அமைப்பில் கற்றல் மேம்பாடடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு PM E-Vidhya திட்டம் வழியாக 200டி.வி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும்.
 
வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு ரூ1,500 கோடி திட்டங்கள்
 
இ.பாஸ்போர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் உள்ள சிப். வைக்கப்பட்டிருக்கும். இது சர்வதேச பயணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்படும்
 
2022-2023 இல் மூலதனச் செலவினங்களுக்கான செலவு 35.4% அதிகரித்து ரூ.7.50 லட்சம் கோடியாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9%
 
2030 ஆண்டுக்குள் 280 கிகா வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு
 
19500 கோடி ரூபாய் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு பொருள்களை உருவாக்குவதற்காக ஒதுக்கீடு
 
2022-23 நிதியாண்டில் 5ஜி சேவையை வழங்க முடிவு
 
இதற்கான அலைக்கற்றை ஏலம் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது .
 
என் ஜி டி ஆர் எஸ் என்ற தனி அமைப்பு மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பதிவு செய்வதற்கான வழிவகைகளை செய்து தரப்படும்
 
ஒரு நாடு ஒரு பதிவு என்ற இந்த முறை ஊக்குவிக்கப்படும்
 
ராணுவத்திற்கான ஆயுத இறக்குமதிகள் குறைக்கப்படும்
 
'ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு’ திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மகளிருக்கு 3 புதிய திட்டங்களை அறிமுகம்.
 
சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.
 
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் ரூபாய் நாணயம் ரிசர்வ் வங்கியால் வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
 
நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9%  அளவில் இருக்கும்
 
மாநிலங்களுக்கு மாநில ஜிடிபியில் 4 சதவிகிதம் வரை நிதி பற்றாக்குறை அனுமதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு
 
மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு
 மாநில அரசுகளுக்கு உதவ ரூ.1,00,000 கோடி நிதி ஒதுக்கீடு
 
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை 2 ஆண்டுகள் வரை தாக்கல் செய்யலாம்
 
ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்க தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒருவருடம் நீட்டிப்பு.
 
பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மூலம் வரும் வருமானத்தில்  30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்:
 
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு
 
கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோர் இந்த திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்யும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்
 
மாநிலங்களுக்கு மாநில ஜிடிபியில் 4 சதவிகிதம் வரை நிதி பற்றாக்குறை அனுமதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு
 
பிட் காயினைப் போல "டிஜிட்டல் ருப்பி" அறிமுகப்படுத்தப்படும்.
 
வேளாண் பொருட்களுக்கான  குறைந்தபட்ச ஆதரவு விலைத் தொகையாக ₹2.37 லட்சம் கோடி உழவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
 
இந்த ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி விகிதங்கள் எந்த மாற்றமும் இல்லை.
 
டிஜிட்டல் சொத்து பரிவர்த்தனைகளுக்கு 30% வரி.
 
குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
 
பட்டை தீட்டப்படாத வைரம்,ரத்தின கற்கள் மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!