வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2015 (16:48 IST)

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : ஆந்திர அதிகாரிகள் சாட்சிகளை மிரட்டுவதாக புகார்

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சாட்சிகளை ஆந்திர அதிகாரிகள் மிரட்டுவதாக மக்கள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
 

 
ஆந்திர சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சம்பவத்தின் சாட்சிகளான சேகர், இளங்கோ, பாலசந்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று திருவண்ணாமலையில் விசாரணை முடிந்த நிலையில் சாட்சிகளான சேகர், இளங்கோவை திருத்தணிக்கு அழைத்துச் சென்றனர்.
 
அங்கு, துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட அன்று அவர்கள் சென்ற வழித்தடத்தினை அதிகாரிகள் பதிவு செய்தனர். அதன் பிறகு, தமிழக காவல் துறையினரிடம் எந்த தகவலும் அளிக்காமல் இன்று அதிகாலை 3 மணியளவில் ஆந்திராவில் சாட்சிகளை அதிகாரிகள் தங்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
 
சாட்சிகளை சந்திக்கச் சென்ற தமிழக காவல் துறையினருக்கும், மக்கள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 2 மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகே சாட்சிகளை சந்திக்க காவல் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
 
இதனால், சாட்சிகளை மிரட்டி வழக்கை திசைத்திருப்பும் முயற்சியில் ஆந்திர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி டிபேன் குற்றம்சாட்டி உள்ளார்.