லாபத்திற்காக 2 ஆயிரம் பெண்களின் கர்ப்பபை அகற்றம்
கர்நாடக மாநிலம் காலபுரகி மாவட்டத்தில் 2 ஆயிரம் பெண்களின் கர்ப்பபை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் காலபுரகி மாவட்டத்தில் 2200 பெண்களை ஏமாற்றி அவர்களின் கர்ப்பபை நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 4 மருத்துவமனைகள் செயல்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையின் உரிமம் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் 2015 ஆம் ஆண்டு நடந்தது. சுகாதார துறையால் விசாரணை நடத்தபட்டு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்ட்டன. ஆனால் தற்போது இந்த மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.