குடிக்க தண்ணீர் தர மறுத்த 2 பூசாரிகள் கைது

குடிக்க தண்ணீர் தர மறுத்த 2 பூசாரிகள் கைது


Dinesh| Last Modified வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (02:27 IST)
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள குன்னார் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி சுதாவிற்கு தனது தந்தையுடன் வயலில் வேலை செய்த போது கடுமையாக தண்ணீர் தாகம் ஏற்பட்டது.

 


இதனால் தனது தந்தையிடம் குடிப்பதற்கு தந்தையிடம் தண்ணீர் கேட்டுள்ளார். இதனையடுத்து  கோவிலுக்கு அருகில் உள்ள கை பம்பில் தண்ணீர் பிடித்து செல்ல கோவில் பூசாரியிடம் அனுமதி கேட்ட சிறுமியின் தந்தையிடம், கோவிலில் வேலை செய்துகொண்டிருந்த பூசாரி தலித்துகள் யாரும் கை பம்பில் தண்ணீர் குடிக்க கூடாது என்று கடுமையாக கூறினார்.

இதனால் கோபம் அடைந்த சிறுமியின் தந்தை கோவில் பூசாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் சிறுமியின் தந்தையை 2 கோவில் பூசாரிகள் சரமாறியாக அடித்து உதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குடிக்க தண்ணீர் தர மறுத்த 2 கோவில் பூசாரிகளை கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :