செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Muthukumar
Last Modified: ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (16:45 IST)

1977ஆம் ஆண்டிற்குப் பிறகு டெல்லியில் அதிகபட்ச வாக்குப்பதிவு

கடந்த  27 ஆண்டுகளில் இந்த லோக்சபா தேர்தலில்தான் டெல்லியில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
நடப்பு லோக்சபா தேர்தலில் டெல்லியில் 65.05% வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
நெருக்கடி நிலை பிரகடணம் வாபஸ் பெறப்பெற்ற பிறகான 1977ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் டெல்லியில் 71.3% வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுதான் இன்னமும் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் அதற்கு அடுத்த படியாக இப்போது அதிகபட்ச வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
 
2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 66.1% வாக்குப்பதிவு நடைபெற்றது.