வால் முளைத்த சிறுவன்: அறுவை சிகிச்சை செய்து நீக்கிய மருத்துவர்கள்!
வால் முளைத்த சிறுவன்: அறுவை சிகிச்சை செய்து நீக்கிய மருத்துவர்கள்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறுவன் ஒருவனுக்கு முதுகுப்பகுதியில் வால் முளைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு 18 வயதில் விடுதலை கிடைத்துள்ளது.
அந்த சிறுவன் பிறந்தது முதலே அவனுக்கு முதுகின் கீழ் பகுதில் வால் உள்புறமாக இருந்துள்ளது. சிறுவன் வளர, வளர வாலும் உள்புறமாக வளர்ந்து வந்துள்ளது. 18 செ.மீ அளவுக்கு அந்த வால் வளர்ந்துள்ளது.
இதனால் அவனால் நீண்ட காலமாக சரிவர உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, முதுகுப்பகுதியில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதனால் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் முதுகுப்பகுதியில் உள்நோக்கி வளரும் 18 செ.மீ நீளம் கொண்ட வால் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த வாலை அறுவை சிகிச்சை மூலம் நாக்பூர் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.