செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 மார்ச் 2025 (09:25 IST)

14 வயது சிறுமியை திருமணம் செய்த 16 வயது சிறுவன்.. திருப்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூர் மாவட்டம் ஆலங்காடு என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 16 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனது பெற்றோர் இறந்துவிட்டதால் தாத்தாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது,

இந்த நிலையில் தனது தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல்  தெரியவந்துள்ளதை அடுத்து நேற்று சிறுமி தாத்தாவை பார்க்க திருப்பூர் சென்றபோதுதான் அந்த சிறுமிக்கு திருமணம் ஆனதே அவரது தாத்தாவுக்கு தெரிந்து உள்ளது.

இதனை அடுத்து திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காஞ்சிபுரத்தில் திருமணம் நடந்ததால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

14 வயது சிறுமியை 16 வயது சிறுவன் திருமணம் செய்த சம்பவம் திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva