புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 31 மே 2017 (10:47 IST)

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 12 வயது இந்திய சிறுமி!!

மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டிகளைப் போல சிறுமிகளுக்கென உலகளவில் “லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்” போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 


 
 
இந்த லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள ஒடிசாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த ஆண்டிற்கான போட்டி ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பத்மாலயா நந்தா என்ற 12 வயது சிறுமி கலந்துகொள்ளவுள்ளார். 
 
சமீபத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற மிஸ் லிட்டில் ஜுனியர் போட்டியில் வெற்றி பெற்றதால், அவருக்கு லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.