ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 26 மார்ச் 2020 (20:10 IST)

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சம்பள உயர்வு .. மத்திய அரசு அறிவிப்பு !

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சம்பள உயர்வு .. மத்திய அரசு அறிவிப்பு !

இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிகப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சச்ரவையி உள்ள அமைச்சர்கள் தொடர்ச்சியாக பல பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இதில் நாட்டு மக்களின் பசி, பட்டிணி, வேலையின்மையைப் போக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்வோருக்கு தொகுப்பு ஊதியமாக 182 ரூபாயிலிருந்து ரூ. 202 ஆக உயர்த்தி வழங்கப்படவுள்ளது.

இதனால் ஒரு பணியாளருக்கு ரூ.2000 ஊதிய உயர்வு கிடைக்கும். இதனால் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 5 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரின் விவ்சாயிகள் நலத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் தவணையாக ரூ. 200 0 வீதம் நேரடியாக பணியாளர்களின் சம்பளக் கணக்கில் செலுத்தப்படுமெனவும், இந்த திட்டத்தினால் நாடு முழுவதும் உள்ள சுமார் 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.