1,300 கிலோ தங்கம் - வங்கியில் டெபாசிட் செய்த கோடீஸ்வர் யார் தெரியுமா?

1,300 கிலோ தங்கம் - வங்கியில் டெபாசிட் செய்த கோடீஸ்வர் யார் தெரியுமா?


K.N.Vadivel| Last Updated: வியாழன், 21 ஏப்ரல் 2016 (05:13 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,300 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்துள்ளார் திருமலை திருப்பதி வெங்கடாஜபதி.
 
 
உலகப் புகழ் கோவில்களில் இந்தியாவில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் மிகவும் பிரபலம்.
 
இந்த கேவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்பு தாங்கள் வேண்டிக் கொண்டவாறு காணிக்கை செலுத்துகின்றனர்.
 
இதில், தங்க நகைகள் மட்டுமே ஆண்டுக்கு ஒரு டன்னை தாண்டி வருகிறது. இவ்வாறு வரும் தங்க நகைகள் மும்பையில் உள்ள ஒரு பிரபல தங்கசாலைக்கு அனுப்பி வைத்து, அங்கு உருக்கப்பட்டு, தங்க கட்டிகளாக மாற்றப்படுகிறது. பின்பு, பல்வேறு அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
 
இந்த நிலையில், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்த 1,311 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :