1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:47 IST)

’அரை டவுசர் அணிய அனுமதிக்க வேண்டும்’ – கல்லூரி பெண்கள் போராட்டம்

’அரை டவுசர் அணிய அனுமதிக்க வேண்டும்’ – கல்லூரி பெண்கள் போராட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள, மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில், விடுதி நேரம் தொடர்பாகவும், பெண்கள் ஆடை உரிமைக்காகவும், கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.


 
இது குறித்தும் ஹர்ஷா என்ற மாணவி கூறுகையில், “நாங்கள் கல்லூரி முத்துவிட்டு, பயிற்சி வகுப்பிற்காக சென்று வருவதால், இரவு 9 மணுக்கு மேல் ஆகிறது. எங்களை கல்லூரி விடுதிக்குள் இரவு 9 மணிக்கு மேல் அனுமதிக்க மறுக்கின்றனர். ஆனால் ஆண்களை மட்டும் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும், விடுதியில் அனுமதிக்கின்றனர். மேலும், பெண்கள் அரை டவுசர் அணிய தடை என்று கூறுகின்றனர். நாம் 21 வது நூற்றாண்டில், இருக்கின்றோம், இதை கேட்கும் பொழுது சிறிப்பு தான் வருகிறது” என்றார்.