ராகுல் காந்தியை புகழ்ந்து பேசிய வருண் காந்தி

Varun Gandhi & Rahul Gandhi
Veeramani| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:48 IST)
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் பணிகள் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவை. அதே போன்று நானும் செயல்பட விரும்புகிறேன் என்று பாஜகவை சேர்ந்த வருண் காந்தி பேசியது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Varun Gandhi & Rahul Gandhi
பாஜகவை சேர்ந்த வருண் காந்தி, மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு நேற்றிரவு அங்கு நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், “காங்கிரசின் துணைத் தலைவரும் அமேதி தொகுதியின் வேட்பாளருமான ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்.
 
குறிப்பிடத்தக்க அம்சமாக பெண்களின் முன்னேற்றத்திற்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் அவர் எடுத்து கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுதலுக்குரியது. நானும் எனது தொகுதிக்கு இதுபோன்ற திட்டங்களை செய்ய விரும்புகிறேன்” என்றார்.
 
வருண் காந்தி ராகுலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :