முசாபர்நகர் கலவர குற்றவாளிகளை வேட்பாளர்களாக பரிந்துரைத்துள்ள உத்தர பிரதேச பாஜக

Webdunia| Last Updated: வியாழன், 13 மார்ச் 2014 (17:30 IST)
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமானவர்கள் என்று குற்றம்சாற்றப்பட்ட 4 பேரை அம்மாநில பாஜக, மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலில் இணைத்துள்ளது.
 
FILE

உத்தர பிரதேச பாரதீய ஜனதா கட்சி, மேலிடத்துக்கு அனுப்பியுள்ள 200 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பரிந்துரை பட்டியலில், முசாபர்நகர் கலவரத்திற்குக் காராணமானவர்கள் என்று குற்றம்சாற்றப்பட்ட சுரேஷ் ராணா, ஹக்கும் சிங், சஞ்சீவ் சோம், பாரத்தேந்து ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை, அம்மாநில கட்சித் தலைவர் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கட்சி மேலிடம், அவர்கள் மீதான குற்றச்சாற்று அடிப்படையற்றது. அவர்கள் கட்சியைப் பணியை மட்டுமே ஆற்றிவருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :