நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: அமெரிக்கா

Webdunia|
இதுபற்றி அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிலாப்பர் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த 1984-ம் ஆண்டுக்குப்பின் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி அரசு தான் நடந்து வருகிறது.

அதேபோன்ற நிலைதான் 2014 பாராளுமன்ற தேர்தலிலும் நீடிக்கும் என்று நாங்கள் கணித்து இருக்கிறோம். அரசியல் கட்சிகளின் எண்ணங்களும் ஒவ்வொரு மாதிரியான கொள்கைகளை கொண்டு இருக்கின்றன. எனவே தான் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது.
இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையிலும், பொருளாதாரக் கொள்கையிலும் மாற்றங்கள் வரலாம். தேர்தலுக்குப் பின் அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது.

இந்தியாவில் 2005 முதல் 2012-ம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் 8 சதவீதம் இருந்தது. 2014-ம் ஆண்டில் சராசரி வளர்ச்சி விகிதம் 5 சதவீதம் அளவுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :