கிருஷ்ணாமணி கண்ணன்,சிங்கப்பூர் கிஷன் ஆகியோர்கள் தயாரித்து கிஷன் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "எமகாதன்"
இத்திரைப்படத்தில் கார்த்திக் ஸ்ரீராம், ராஸ்மிதா,ஹிவாரி, சதீஷ்,மனோஜ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த கைம் பெண்ணான பாஞ்சாயி தனக்கு நேர்ந்த கொடுமையின் காரணமாக ஒரு சாபத்தை விட்டு செல்கிறாள்.
அந்த கிராமத்தில் மூத்த மகன்கள் யார் திருமணம் செய்து கொண்டாலும் அவனுடைய மனைவி விதவையாவாள்.
இந்த சாபத்திலிருந்து மீள்வதற்காக பாஞ்சாயியை தெய்வமாக்கி அந்த கிராமமே வழிபட்டு வருகிறது.
பரம்பரை பரம்பரையாக குடும்பத்தின் மூத்த மகன் திருமணம் செய்து கொண்டதும் இறந்து விட அவன் மனைவி விதவையாவது தொடர்கிறது.
இதற்கு பயந்து கொண்டு சில பேர் ஊரை விட்டுக் கிளம்பிப் போவதும், இருக்கும் சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்வதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த கார்த்திக் ஸ்ரீராம் தன் காதலி ராஸ்மிதா ஹிவாரியைத் திருமணம் செய்து கொள்ள,கார்த்திக் ஸ்ரீராமும் மரணம் அடைகிறார்.
அதில் மனமுடைந்து போன ராஸ்மிதாவுக்கு இந்த சாப விஷயம் மூடநம்பிக்கை,தன் கணவன் மரணம் எப்படி நடந்தது என்பதை கார்த்திக்கின் நண்பர் மனோஜின் துணையுடன் கண்டுபிடிக்க முயல்கிறார்.
கார்த்திக் கொலை செய்யப்பட்டாரா?
பாஞ்சாயி சாபமா?அதன் பின்னணியில் செயல்படுவது யார்?என்பது தான் படத்தின் மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் ஸ்ரீராம் சிறப்பாக நடித்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் ராஸ்மிதா ஹிவாரி நடிப்பு சுமார் தான்.
கார்த்திக்கின் நண்பராக நடித்திருக்கும் மனோஜ் கதாபாத்திரத்திற்கேற்றவாறு நன்றாக நடித்துள்ளார்.
படத்தின் மற்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும் கொடுத்த வேலை சிறப்பாக செய்துள்ளனர்.
விக்னேஷ் ராஜா இசையில், பாடல்கள் படத்திற்கு உத்வேகம் கொடுத்துள்ளது.
பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டம்.
எல்.டியின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் மண்ணாசை பிடித்த மனிதன் ஒரு "எமகாதகன்"