வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (18:58 IST)

வில்லன் பெயர் ‘தனுஷ்கோடி’ என வைக்க என்ன காரணம்? ‘மாநாடு’ இயக்குனர் விளக்கம்!

சிம்பு, தனுஷ் ஆகிய இருவருமே கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் போட்டியாளர்களாக உள்ளார்கள் என்பதும் இருவரது படங்கள் வெளியாகும் போதும் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் காட்சிகள் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள சிம்புவின் மாநாடு திரைப் படத்தில் வில்லன் கேரக்டரில் தனுஷ்கோடி என்ற வைக்கப்பட்டுள்ளது, தனுஷ் ரசிகர்களை சீண்டி உள்ளது போல் தெரிகிறது 
 
இதனை அடுத்து இது குறித்து விளக்கமளித்த இயக்குனர் வெங்கட்பிரபு தனுஷ்கோடி என்ற பெயர் வலிமையானது என்பதால் அந்தப் பெயர் வைக்கப்பட்டது என்பதும் இதன் காரணத்தை கேட்டால் தனுஷே சந்தோசப் படுவார் என்றும் கூறியுள்ளார்
 
ஏற்கனவே ஈஸ்வரன் திரைப்படத்தில் அசுரன் படம் குறித்த வசனம் ஒன்றை சிம்பு பேசி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது