ராஜா ரங்குஸ்கி: திரைவிமர்சனம்
போலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் சிரிஷ், எழுத்தாளர் சாந்தினியை மனதிற்குள் காதலிக்கின்றார். அவருடன் பேசும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவருடைய எழுத்து துறைக்கு உதவி செய்ய அப்படியே அவர்களுடைய நட்பு தொடர்கிறது. இருப்பினும் அவரை காதலிக்க செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார் சிரிஷ். ஆனால் அந்த திட்டமே அவரை பெரும் சிக்கலில் மாட்டிவிடுவதுடன் ஒரு கொலைப்பழியும் அவர் மீது விழுகிறது. சிரிஷ் தான் கொலை செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைக்க போலீசாரிடம் இருந்து தப்பி உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்கின்றார். உண்மையான கொலையாளி யார் என்பதை அறிந்ததும் சிரிஷ் மட்டுமல்ல, ஆடியன்ஸ்களும் அதிர்கின்றனர்.
ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் கதைக்கு நாயகன் சிரிஷ் உடலளவில் ஃபிட் என்றாலும் நடிப்பில் இன்னும் அவர் நிறைய தேற வேண்டும். முகத்தில் வித்தியாசமான உணர்ச்சிகளை காண்பிக்க திணறுகிறார். இருப்பினும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் அவரது நடிப்பில் உள்ள குறை தெரியவில்லை
சாந்தினி நல்ல தேர்வு. எழுத்தாளராக அறிமுகமாகி அதன் பின் சிரிஷ் காதலியாகி அதன் பின்னர் மற்றொரு சிக்கலில் மாட்டும்போது வித்தியாசமான நடிப்பை கொடுத்துள்ளார்.
சிரிஷ் நண்பராக நடித்திருக்கும் கல்லூரி வினோத் காமெடியிலும் பட்டையை கிளப்புகிறார். அதேபோல் சிபிசிஐடி அதிகாரி ஜெயகுமார் ஜானகிராமன் குழந்தைத்தனமாக ஒரு கொலை வழக்கை விசாரணை செய்கிறார். சில காட்சிகள் வந்தாலும் அனுபமா குமார் நடிப்பு அருமை
இந்த படத்தின் உண்மையான ஹீரோ யுவன்ஷங்கர் ராஜாதான். பின்னணி இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இரண்டு பாடல்களும் ஓகே ரகம்
ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார் இயக்கி தரணிதரன். சுஜாதாவின் தீவிர ரசிகராக இருக்க வேண்டும். ரங்குஸ்கி உள்பட பல சுஜாதாவின் டச் படத்தில் உள்ளது. கடைசி வரை கொலையாளி யார் என்பதை சஸ்பென்ஸ் உடன் கதையை நகர்த்தி சென்றதற்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ராஜா ரங்குஸ்கி ஒரு அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்
ரேட்டிங்: 3/5